கேரவனில் நடந்த சம்பவம்; அழக்கூட முடியவில்லை: நடிகை தமன்னா வேதனை!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, அஜித், விஜய் உள்பட எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். 

பெப்ரவரி 7, 2025 - 12:26
கேரவனில் நடந்த சம்பவம்; அழக்கூட முடியவில்லை: நடிகை தமன்னா வேதனை!

கேரவனில் இருக்கும்போது தனக்கு நடந்த விரும்பத் தகாத சம்பவம் பற்றி பகிர்ந்துள்ள நடிகை தமன்னா, அந்தச் சம்பவத்தில் இருந்து தான் எப்படி மீண்டு வந்தேன் எனவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, அஜித், விஜய் உள்பட எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். 

இந்தநிலையில், அவர் ஷூட்டிங்கின்போது நடந்த ஒரு விரும்பத் தகாத நிகழ்வு பற்றி பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். 

"நான் கேரவனில் இருந்தபோது அந்த சம்பவம் நடந்தது. நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் கண்கள் கலங்கிவிட்டன. அப்போது நான் நடிப்பதற்குத் தயாராக முழு மேக்கப்புடன் இருந்தேன். அதனால் அப்போது என்னால் அழக்கூட முடியவில்லை" என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

"எனக்கு நானே தைரியம் சொல்லிக்கொண்டேன். அந்தக் கடினமான உணர்வில் இருந்து மெல்ல மாறினேன். பிறகு என்னைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டேன். அது எனக்கு ஆறுதல் அளித்தது" என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியானசிக்கந்தர் கா முகாதுர் படம் நெட்பிளிக்ஸில் ஓடிடி தளத்தில் வெளியானது.  தற்போது ஒடேலா 2 படத்தில் சிவ சக்தி என்ற கேரக்டரில் நடித்துவருகிறார். 

எனினும், தமன்னா தமிழில் நடித்து நீண்ட காலம் ஆகிவிட்டதுடன், கடைசியாக, தமன்னா நடிப்பில் வெளியான படம் 'அரண்மனை 4' என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!