மனைவி பெயரில் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

இது வருமான வரி விதிகளின்படி, 80சி-யின்படி, இந்த வட்டிக்கு நீங்கள் 8 ஆண்டுகள் வரை வரி விலக்கு கோரலாம்.

பெப்ரவரி 7, 2025 - 12:21
மனைவி பெயரில் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

திருமணத்திற்கு பின்னர் திருமணமான பெண் படிக்க வேண்டும் என்றால், அதற்கு பணம் வேண்டும். இதற்காக கல்விக் கடன் வாங்கினால், அதில் பெரும் தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது.

உங்கள் மனைவியின் உயர்கல்விக்கு நிதியளிக்க கல்விக் கடனைப் பெற்றிருந்தால், வட்டி செலுத்தத் தொடங்கும் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகள் வரை வட்டியைத் திருப்பிச் செலுத்தும் வரிச் சலுகை வழங்கப்படும்.

அதாவது இது வருமான வரி விதிகளின்படி, 80சி-யின்படி, இந்த வட்டிக்கு நீங்கள் 8 ஆண்டுகள் வரை வரி விலக்கு கோரலாம்.

தற்போது வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பதால், பணத்தை நீண்ட காலத்தின் அடிப்படையில் கடன் வாங்கினால், வட்டி ஒரே மாதிரியாக இருக்கும். 

அதேநேரம் இந்த கல்விக்கடனை நீங்கள் பொதுத்துறை வங்கிகள் அல்லது அரசு அங்கீகரித்த நிதி நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்கியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!