ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்.. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி?
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா , விராட் கோலி டி20 போட்டிகளில் விளையாடவில்லை.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்ய இன்று தேர்வுக்குழு கூடுகிறது.
இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று டி20 போட்டிகள், வரும் 11, 14 மற்றும் 17ஆம் திகதிகளில் மொகாலி, சங்கர்பூர் (மேற்கு வங்காளம்), பெங்களூரில் நடக்கிறது.
இந்த நிலையில், மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக டி20 தொடரில் விளையாட விரும்புவதாக பிசிசிஐயிடம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியானது.
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா , விராட் கோலி டி20 போட்டிகளில் விளையாடவில்லை.