அதிவேக நெடுஞ்சாலையில் பெண் படுகொலை... வெளியான தகவல்
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு நேற்று நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ நுழை வாயில் அருகில் பெண்ணொருவரை கொன்றதாக சந்தேகிக்கப்படும் 45 வயதுடைய நபர் ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவில் விமான சேவை அதிகார சபையின் ஊழியரான 41 வயதுடைய பெண் நேற்று மாலை கஹதுடுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சந்தேக நபர் கூரிய பொருளால் தாக்கியுள்ளார்.
ஒரு கும்பலுடன் காரில் வந்த நபர், பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் மீ்து தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலைத் தொடர்ந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு நேற்று நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் தெரியவில்லை, சம்பவம் தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.