ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்ற தீர்ப்புக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்ற தீர்ப்புக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதிகபட்ச தண்டனை விதித்ததற்கான காரணத்தை விசாரணை நீதிமன்ற நீதிபதி கூறவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டு தண்டனை வழங்கும் அளவுக்கு இந்த வழக்கு பொருத்தமானதா என்றும் உச்சநீதிமன்ற கேள்வி எழுப்பி உள்ளது.
இரண்டு ஆண்டு தண்டனை காரணமாக ஒரு தொகுதி மக்கள் தங்கள் உறுப்பினர் இழந்துள்ளனர் என்றும் ஒரு எம்பி நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஒரு வருடம் 11 மாதங்கள் தண்டனை வழங்கி இருக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.