மேஷ ராசிக்கு செல்லும் சூரியன் - 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்... உங்க ராசி என்ன?

​​தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் நுழையப் போகிறார். இந்த சூரியப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்காத அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறது. வரப்போகும் ஒரு மாத காலம் அவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நிலவும்.

ஏப்ரல் 14, 2025 - 15:16
மேஷ ராசிக்கு செல்லும் சூரியன் - 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்... உங்க ராசி என்ன?

ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமான சூரியபகவான் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சூரியனின் ஆசி இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் செல்வமும், வளமும் பெருகும்.

​​தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் நுழையப் போகிறார். இந்த சூரியப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்காத அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறது. வரப்போகும் ஒரு மாத காலம் அவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நிலவும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களின் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உங்கள் சேமிப்பை சரியான முறையில் பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த ராசி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் மற்றும் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். மன ஆரோக்கியம் மேலோங்குவதால், அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பான முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் தற்போது அனுபவித்து வரும் மனரீதியான பிரச்சினைகள் நீங்கும். பதட்டங்கள் குறைந்து வாழ்க்கையில் அமைதியான சூழல் நிலவும். ஆரோக்கியம் பற்றி இருந்து வந்த கவலைகள் நீங்கும். பொருளாதாரநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். வேலை தேடுபவர்கள் புதிய வேலையில் நுழைந்து அதில் சிறந்து விளங்க வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சந்தித்து வந்த பணக்கஷ்டம் முடிவுக்கு வருகின்றது. பல சாதனைகளை செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் இதுவரை இல்லாத லாபத்தை அடையும் வாய்ப்புகள் உருவாகும், இதனால் வருமானம் விரைவாக அதிகரிக்கும். அலுவலகப் பணியில் இருப்பவர்கள் நிறைவான சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். அவர்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பிய சாதனைகளை அடைய வாய்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் எதிர்கொண்ட முக்கிய தடைகள் நீங்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய உச்சத்தை அடைய அவர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகும். அவர்கள் வாழ்க்கையில் முக்கியமான ஆசைகளில் ஒன்று இப்போது நிறைவேறும். மாணவர்களுக்கும் பொன்னான நாட்கள் வரவிருக்கின்றன.

(பொறுப்புத் துறப்பு: எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!