பரீட்சை நிலையத்தின் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த மாணவி

விபத்தில் அவரது இரண்டு கால்களும் காயமடைந்துள்ளதாகவும், அவர் உயிர் பிழைத்தது ஒரு அதிசயம் என்றும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 11, 2025 - 21:09
பரீட்சை நிலையத்தின் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த மாணவி

உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவி ஒருவர் இன்று மதியம் கல்லூரியின் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் அவரது இரண்டு கால்களும் காயமடைந்துள்ளதாகவும், அவர் உயிர் பிழைத்தது ஒரு அதிசயம் என்றும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது முறையாக இந்த முறை மாணவி உயர்தரப் பரீட்சை எழுதுகிறார் என்பது தெரியவந்துள்ளது.

உயிரியல் வினாத்தாள் வழங்கப்படுவதற்கு சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு விபத்து நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகாயமடைந்த 19 வயது மாணவர் மொரட்டுவையைச் சேர்ந்தவர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!