படகு கவிழ்ந்து மாணவன் உயிரிழப்பு

செல்லக்கதிர்காமம் பகுதியில் உள்ள அக்கரவிஸ்ஸ வாவியில் 5 மாணவர்கள் பயணித்த கட்டுமர படகொன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் 8, 2024 - 00:41
டிசம்பர் 20, 2024 - 02:07
படகு கவிழ்ந்து மாணவன் உயிரிழப்பு

செல்லக்கதிர்காமம் பகுதியில் உள்ள அக்கரவிஸ்ஸ வாவியில் 5 மாணவர்கள் பயணித்த கட்டுமர படகொன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (07) மாலை 5.45 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர் செல்லக் கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய பிரமோத் என்ற மாணவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவனின் சடலம் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயர்தரத்தில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் இந்த படகில் பயணித்த நிலையில், படகு கவிழ்ந்ததை தொடர்ந்து கிராம மக்கள் உடனடியாக விரைந்து அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!