சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில்  கடுமையான கட்டுப்பாடு 

போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாளாந்தம் சுமார் 1000 பேர் வரை கைது செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஜுன் 15, 2024 - 23:13
சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில்  கடுமையான கட்டுப்பாடு 

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு மதிப்பெண் வழங்கும் நடைமுறை விரைவில் ஆரம்பிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன கூறியுள்ளார்.

அது  தொடர்பான நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாளாந்தம் சுமார் 1000 பேர் வரை கைது செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்திய பின்னர் இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதிகளின் புள்ளிகள் குறைக்கப்படும்.

24 புள்ளிகள் சாரதி அனுமதி பத்திரத்தில் வழங்கப்படுவதுடன், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றால் 10 புள்ளிகள் குறைக்கப்படும்.

குடி போதையில் வாகனம் ஓட்டினால் 6 புள்ளிகள் குறைக்கப்படும். 24 புள்ளிகள் குறைக்கப்பட்டால் 2 வருடங்களுக்கு சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும்.

2 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து பரீட்சை எழுதி சாரதி அனுமதி பெற வேண்டும்.

அத்துடன், விதிகளை மீறும் சாரதிகளுக்கு பயிற்சியளித்த தரப்பினர் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!