பாடசாலை பாடத்திட்டத்தில் விரைவில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த ஆலோசனை

பிரச்சினைகள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் காரணமாகவே குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதி, துஷ்பிரயோகம், போதைப் பழக்கம் போன்ற இடம்பெறுகின்றன.

நவம்பர் 22, 2023 - 21:30
நவம்பர் 22, 2023 - 21:31
பாடசாலை பாடத்திட்டத்தில் விரைவில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த ஆலோசனை

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதன் காரணமாக, சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட பல சமூக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தடுப்பு தினத்தை முன்னிட்டு கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமைச்சர் கூறுகையில், “சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் சமூகத்தில் காணப்படும் போட்டி தன்மை காரணமாக ஒரு தலைமுறை மன அழுத்தத்தில் உள்ளது. எதிர்கால பயிற்சித் திட்டங்களில் மனநல மருத்துவத் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில்  அதிரடி மாற்றம்

இலங்கையில் பிராந்திய மட்டத்தில் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு பல அதிகாரிகள் உள்ளனர். 331 பிரதேச செயலகப் பிரிவுகளும் 25 மாவட்ட அபிவிருத்திக் குழுக்களும் மாதாந்த அபிவிருத்திக் குழுவை நடத்துகின்றன. இதன் மூலம் இப்பிரச்சினைகளில் பெருமளவு தலையீடு செய்ய முடியும்.

பிரச்சினைகள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் காரணமாகவே குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதி, துஷ்பிரயோகம், போதைப் பழக்கம் போன்ற இடம்பெறுகின்றன.

பாடசாலைகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது பொருத்தமற்றது என சிலர் வாதிடுகின்றனர். அதனை மிகவும் பொருத்தமான முறையில் பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்க வேண்டும். கல்வி சீர்திருத்தத்தில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என அமைச்சர் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!