சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் அதிரடி மாற்றம்
பாராளுமன்றத்தில் இன்று (22) எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

4 வயதை பூர்த்தி செய்த சிறுவர்கள் முன்பள்ளியில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (22) எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், இது தொடர்பான பத்திரமொன்று பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 10 ஆம் தரத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், 17 வயதில் ஒரு மாணவர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.