சம்பள உயர்வுக்கு வாய்ப்பு... இன்று 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கவுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கவுள்ளார்.
இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரச துறை மற்றும் தனியார் துறையின் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
20,000 ரூபாய் சம்பள உயர்வைக் கோரி அரச சேவையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் கடந்த சில நாட்களாகப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்ளை மேற்கொள்வது தொடர்பிலான யோசனைகளை முன்வைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.