சூழலியல் ஊடகவியலை ஊக்குவிப்பதற்கான இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின் செயலமர்வு

மூத்த ஊடகவியலாளர்களான பிரசாத் பூர்ணமால் சிங்கள மொழியிலும், கலாவர்ஷ்னி கனகரத்தினம் தமிழ் மொழியில் பயிற்சிப்பட்டறையை நடத்தினர்

ஏப்ரல் 26, 2023 - 18:52
ஏப்ரல் 28, 2023 - 18:40
சூழலியல் ஊடகவியலை ஊக்குவிப்பதற்கான இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின் செயலமர்வு

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு நாள் வதிவிட மோஜோ (MOJO) பயிற்சிப்பட்டறை, கடந்த 24 மற்றும் 25 கொழும்பில் உள்ள SLPI கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு,  MoJo - Mobile Journalism பற்றிய புரிதலை ஊடகத்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் அலைபேசிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களைப் பயன்படுத்துவது பற்றிய புரிதலை வழங்கும் வகையில், இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. 

இலங்கை பத்திரிகை நிறுவனத்தினால் முன்னர் நடத்தப்பட்ட Eco Journalism (சூழலியல் ஊடகவியல்) நிகழ்ச்சித்திட்டத்தில் மாவட்ட ரீதியில் பங்கேற்ற ஊடகவியலாளர்களில் தெரிவுசெய்யப்பட்ட குழுவினர், இந்தப் பயிற்சிப்பட்டறையில் பங்கேற்றனர்.

சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடைபெற்ற இந்தப் பயிற்சிப்பட்டறையானது, முடிவில் பங்கேற்பாளர்களிடமிருந்து மிக அதிக வரவேற்பைப் பெற்றது. 

மூத்த ஊடகவியலாளர்களான பிரசாத் பூர்ணமால் சிங்கள மொழியிலும், கலாவர்ஷ்னி கனகரத்தினம் தமிழ் மொழியில் பயிற்சிப்பட்டறையை நடத்தினர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!