இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டது!

களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம், விரைவில் ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்

டிசம்பர் 6, 2023 - 02:41
இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டது!

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் இன்று (05) வழங்கப்பட்டதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டச் செயலகத்தில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் தலைமையில், டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம், விரைவில் ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழில் உள்ள இலக்கம், சர்வதேச தரநிலைகள் மற்றும் நடைமுறைகளின்படி, தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கமாகவும் பயன்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!