இலங்கையில் முதலாவது கேபிள் கார்: அம்புலுவாவவில் அமைக்க திட்டம்
இதற்காக கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது.
இதற்காக கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த கேபிள் காரானது சீனாவின் சர்வதேச கட்டட இயந்திர கூட்டுத் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
மேற்படி ஒப்பந்தம், அம்புலுவாவ உயிர் பல்வகைமை மையத்துடன் இணைந்து கைச்சாதிடப்பட்டுள்ளது.