தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

காட்டுத் தீ பரவும் பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 27, 2025 - 14:30
தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், காட்டுத் தீ பரவும் பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தென் கொரியாவில் உள்ள இலங்கையர்கள் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் 2 735 2966, 2 735 2967 அல்லது 2 794 2968  என்ற தொலைபேசி எண்கள் ஊடாக தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 24 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தீ விபத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான ஒரு கோயிலும் எரிந்து நாசமானதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவின் சியோல் பகுதியில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று வீசுவதால் காட்டுத்தீ பரவுவது அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன, மேலும் 27,000 பேரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் ஆறு தென்கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ 43,330 ஏக்கர் நிலங்களை எரித்து 19 பேர் காயமடைந்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!