97 வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற இலங்கைப் பெண்
லீலாவதி தர்மரத்ன இதற்கு முன்னர் ஆசிரியையாக கடமையாற்றியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் தனது 97ஆவது வயதில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லீலாவதி தர்மரத்ன கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி நடைபெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் 143ஆவது பட்டமளிப்பு விழாவில் பௌத்தக் கல்வியில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றார்.
இளைய தலைமுறைக்கு முன்னுதாரணமாக, பட்டம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லீலாவதி தர்மரத்ன, கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்றார்.
லீலாவதி தர்மரத்ன இதற்கு முன்னர் ஆசிரியையாக கடமையாற்றியுள்ளார்.