காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியானது
இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தி உள்ளது.