பஸ் மற்றும் ரயில் சேவைக்கு பெண்களை இணைத்துக்கொள்ள தீர்மானம்

மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபைக்கும், ரயில்வே சேவைக்கும் பெண்களை பணியமர்த்த, எங்கள் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

மார்ச் 7, 2025 - 22:32
பஸ் மற்றும் ரயில் சேவைக்கு பெண்களை இணைத்துக்கொள்ள தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில் சேவையில் வெற்றிடமாகவுள்ள இடங்களுக்கு பெண்களை இணைத்துக் கொள்ள கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (7) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், "நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபைக்கும், ரயில்வே சேவைக்கும் பெண்களை பணியமர்த்த, எங்கள் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். 

இன்னும் சில நாட்களில் பெண்கள் பஸ் சாரதிகள், ரயில் ஓட்டுநர்கள், காவலர்களாக பொறுப்பேற்க முடியும். நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் பாடசாலை பஸ்களை பெண்களிடம் ஒப்படைக்கும் கனவும் உள்ளது" என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!