Tamil News Today Live: பண்டிகை கால மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை - ஒரே பார்வையில் முக்கியச் செய்திகள்

Sri Lanka Live News Update Today- 7 April 2024 - இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

ஏப்ரல் 7, 2024 - 11:45
ஏப்ரல் 7, 2024 - 11:50

பண்டிகை கால மோசடி

பண்டிகை கால மோசடி

பண்டிகை காலங்களில் போலி நாணயத்தாள் மற்றும் மோசடி வியாபாரிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புத்தாண்டுக்காக மக்கள் பல்வேறு பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்வதாக தெரிவித்த பொலிஸார், இதன்போது பல்வேறு மோசடியாளர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

திடீரென சாய்ந்த தேர் 

திடீரென சாய்ந்த தேர் 

கர்நாடக மாநிலம் பெங்களுரூ புறநகர் பகுதியான ஹூஸ்கூர் கிராமத்தில் மத்துரம்மா கோயிலில் 120 அடி பிரம்மாண்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வந்தனர். 

அப்போது யாரும் எதிர்பாராவிதமாக ஒருபக்கமாக சாய்ந்து மொத்த தேரும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேர் சாய்வதை கவனித்த பக்தர்கள் சுதாரித்துக்கொண்டு ஓட்டம் பிடித்ததால் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஜனவரி 01 மற்றும் மார்ச் 27 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 53,928 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இதன் மூலம் ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 ஆக விற்பனை செய்யப்படுகிறது.