எரிபொருளின் விலையில் திடீர் மாற்றம்! வெளியான அறிவிப்பு
எரிபொருளின் விலை இன்று(01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எரிபொருளின் விலை இன்று(01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன்படி புதிய விலை 328 ரூபாயாகும்.
ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாயாகும்.
லங்கா ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 2 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 308 ரூபாயாகும்.
சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 6 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாயாகும்.
மேலும், மண்ணெண்ணெய்யின் விலை 9 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் புதிய விலை 236 ரூபாயாகும்.