இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான தகவல்!
சிசு இறப்பு வீதம் 1000 துக்கு 6 ஆகவும் தாய் இறப்பு வீதம் 100,000 துக்கு 28 ஆகவும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 80 வருடங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, பெண்களின் ஆயுட்காரம் சராசரியாக 76/77 வருடங்கள் என கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதுடன், சிசு இறப்பு வீதம் 1000 துக்கு 6 ஆகவும் தாய் இறப்பு வீதம் 100,000 துக்கு 28 ஆகவும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: இம்மாத இறுதியில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்
இந்த நிலைமை ஐக்கிய இராச்சியத்தின் நிலைமையைப் போன்றது என குறிப்பிட்டுள்ள அவர், சுகாதார அமைப்பு சிறப்பாக செயல்படுவதுடன், நோய் தடுப்பு அடிப்படையில் பல நோய்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், 2016 இல் மலேரியா ஒழிக்கப்பட்டதையடுத்து, அதற்கான சான்றிதழை உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை,கடந்த வாரம் 2500 தாதியர் நியமனங்கள் வழங்கப்பட்டதாக கூறிய அவர், 307 பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுவதுடன், அதன்படி, 10,000 பேருக்கு ஒரு பொது சுகாதார பரிசோதகரை வழங்க வேண்டும் என்ற குறியீட்டை நிறைவேற்றுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.