உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
இவ்விரு போட்டிகளின்போதும் மழை பெய்தால் ஆட்டம் என்னவாகும் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி. ஏனென்றால், 2019 உலகக் கோப்பை இந்தியா - நியூஸிலாந்து அரையிறுதியின்போது மழை குறுக்கிட்டது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யப் போவது யார்? எத்தனை ரன்கள் அடிக்கப்படும்? என்ன நடக்கும் என பல விஷயங்களை பிரபல ஜோதிடர் சுமித் பஜாஜ் கணித்து கூறி இருக்கிறார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.