இந்த வீரர் விளையாடினால் நிச்சயம் இந்தியா வெற்றிபெறும்... தினேஷ் கார்த்திக் ... யார் அந்த வீரர் தெரியுமா?

நடப்பு உலகக்கோப்பை தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பெற்ற இந்திய அணியும், நான்காம் இடம் பெற்ற நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. 

நவம்பர் 14, 2023 - 21:46
இந்த வீரர் விளையாடினால் நிச்சயம் இந்தியா வெற்றிபெறும்... தினேஷ் கார்த்திக் ... யார் அந்த வீரர் தெரியுமா?
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அரை இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் முக்கிய வீரர் ஒருவர் வழக்கம் போல தன் அதிரடி ஆட்டத்தை ஆடினால் நிச்சயம் இந்தியா தான் வெற்றி பெறும் என கூறி இருக்கிறார்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பெற்ற இந்திய அணியும், நான்காம் இடம் பெற்ற நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. 

என்ன தான் நியூசிலாந்து அணி இந்த உலகக்கோப்பையில் வெற்றி - தோல்விகளை மாறி மாறி பெற்று இருந்தாலும், 2019 உலகக்கோப்பை அரை இறுதியில் இந்திய அணியை வீழ்த்தி இருப்பதை பலரும் நினைவு கூர்ந்து, இந்திய அணி ஏதோ பலவீனமாக இருப்பது போல பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், தினேஷ் கார்த்திக், நியூசிலாந்து அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போகும் இந்திய வீரர் ரோஹித் சர்மா தான் எனக் கூறி இருக்கிறார். ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் 503 ரன்கள் குவித்துள்ளார். 

அதில் முக்கியமான விஷயம் அவரது ஸ்ட்ரைக் ரேட் 121 என்பது தான். மேலும், நியூசிலாந்து அணிக்கு ரோஹித் சர்மா விக்கெட் தான் பெரிய விக்கெட்டாக இருக்கும். அதே சமயம், ரோஹித் சர்மா விக்கெட் இழக்காமல் தன் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தால், அரை இறுதியில் இந்தியா வெல்வது உறுதி என தினேஷ் கார்த்திக் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக்,"அரை இறுதியில் வெற்றி பெற்றுத் தரக் கூடிய வீரர் ஒருவர் இருக்கிறார் என்றால், இதுவரை விளையாடி ஆட்டத்தை வைத்துப் பார்த்தால் அது நிச்சயம் ரோஹித் சர்மா தான் நியூசிலாந்து அணிக்கு ரோஹித் சர்மா தான் பெரிய விக்கெட்டாக இருப்பார். 

ரோஹித் சர்மா தன் வழக்கமான ஆட்டத்தை விளையாடினால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இந்தியா தான் அரை இறுதியில் வெற்றி பெறும்" கூறியுள்ளார். லீக் சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 46 ரன்களை குவித்தார். இதன் காரணமாகவே அந்தப் போட்டியில் இந்தியா தொடக்கத்தில் அதிக ரன் ரேட் பெற்று, பின் சேஸிங்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!