அரையிறுதியில் யாருக்கு வெற்றி... இந்த வீரர் சீக்கிரம் அவுட் ஆவார்.... பரபரப்பை கிளப்பிய பிரபல ஜோதிடர்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யப் போவது யார்? எத்தனை ரன்கள் அடிக்கப்படும்? என்ன நடக்கும் என பல விஷயங்களை பிரபல ஜோதிடர் சுமித் பஜாஜ் கணித்து கூறி இருக்கிறார்.

நவம்பர் 14, 2023 - 22:33
நவம்பர் 14, 2023 - 22:34
அரையிறுதியில் யாருக்கு வெற்றி... இந்த வீரர் சீக்கிரம் அவுட் ஆவார்.... பரபரப்பை கிளப்பிய பிரபல ஜோதிடர்

2023 உலகக்கோப்பை முதல் அரை இறுதிப் போட்டியில் நாளைய தினம்  இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

இந்த நிலையில், இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யப் போவது யார்? எத்தனை ரன்கள் அடிக்கப்படும்? என்ன நடக்கும் என பல விஷயங்களை பிரபல ஜோதிடர் சுமித் பஜாஜ் கணித்து கூறி இருக்கிறார்.

இந்தியா முதலில் பந்து வீசும் என்றும் அதன் பின் சேஸிங் செய்வதுடன், 47 - 48 வது ஓவரில் சேஸிங்கில் இந்தியா வெற்றி பெறும் என்றும், நியூசிலாந்து அணி 250 முதல் 270 ரன்கள் வரை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயம் செய்யும் என அந்த ஜோதிடர்  கூறி இருக்கிறார்.

தற்போது உச்சகட்ட பார்மில் உள்ள நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 2023 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 9 போட்டிகளில் மூன்று சதம், இரண்டு அரைசதம் என 565 ரன்கள் குவித்துள்ளார். 

அவர் அரை இறுதியில் பெரிய அளவில் ரன் குவித்தால் இந்திய அணிக்கு தலைவலியாக மாறும் என்ற நிலையில், ரச்சின் ரவீந்திரா குறித்து கணித்த அந்த ஜோதிடர்,  ரச்சின் அரை இறுதியில் சரியாக ஆட மாட்டார். அவர் விரைவில் தன் விக்கெட்டை பறி கொடுத்து விடுவார் என்று கூறியுள்ளார்.

அத்துடன், நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை மிட்செல் சான்ட்னர், டெவான் கான்வே ஆகியோரை நாம் கவனமாக பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தப் போட்டி இந்திய அணிக்கு எளிதாக இருக்காது என்றும் நியூசிலாந்து அணி சில சவால்களை இந்திய அணிக்கு அளிப்பதுடன்,  இந்திய அணியில் விராட் கோலி, சுப்மன் கில், ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக ஆடுவார்கள் என்று கூறியுள்ள அவர், சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் முக்கிய பங்காற்றுவார் எனவும் கணித்து உள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!