உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண பிரபலங்கள் வருகை

உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண பிரபலங்கள் வருகை
ADVERTISEMENT
ADVERTISEMENT

உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண பிரபலங்கள் நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் நேரில் வருகை தரவுள்ளனர்.

இதேபோல், அசாம், மேகாலயா உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட மாநில முதலமைச்சர்கள், அமித்ஷா அனுராக் தாகூர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் நேரில் வந்து இறுதிப்போட்டியை காணவுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தொடர்ந்து, உச்சநீதிமன்ற, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமெரிக்கா, ஐக்கிய அரசு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் வருகை தருகின்றனர்.

மேலும், தொழிலதிபர் லட்சுமி மிட்டல், முகேஷ் அம்பானி மனைவி நீட்டா அம்பானி ஆகியோரும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகின்றனர். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT