வழக்கு தொடர்பாக தனுஷ்க விசேட கோரிக்கை
அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த இந்தக் கோரிக்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 24ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜூரியின்றி விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனுஷ்கவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை தொடர்பில், நீதவான் முன்னிலையில் மாத்திரம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்படும் வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த இந்தக் கோரிக்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 24ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது இளம் பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் தனுஷ்க குணதிலக்க நவம்பர் 6 ஆம் திகதி சிட்னியில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவருக்கு எதிராக 04 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு பின்னர் 03 குற்றச்சாட்டுகள் விசாரணை அதிகாரிகளால் வாபஸ் பெறப்பட்டன.