தமிழ் பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்
விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்து இருந்தது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று (13) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்து இருந்தது.
இந்த நிலையில், இன்றைய விடுமுறைக்கு பதிலாக நவம்பர் 18ஆம் திகதி (சனிக்கிழமை) பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறும் என அமைச்சு கூறியுள்ளது.
ஏனைய பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளுக்கு இந்த தீர்மானம் பொருந்தாது எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.