தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு
அரசியல் கட்சியாக கருதப்படுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (28) முதல் மார்ச் 28 ஆம் திகதி மதியம் 3.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

2025ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்காக தகுதியான செயற்பாட்டில் உள்ள கட்சிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (27) பிற்பகல் விசேட அறிவிப்பை வெளியிட்டது.
அந்த அறிவிப்பின்படி, தேர்தல் பணிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கருதப்படுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (28) முதல் மார்ச் 28 ஆம் திகதி மதியம் 3.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
உரிய விண்ணப்பங்களை பதிவு தபாலில் அனுப்பலாம் அல்லது சம்பந்தப்பட்ட கட்சியின் செயலாளர் நேரில் வந்து தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.