அரச உத்தியோகத்தர்களுக்கு நவம்பர், டிசெம்பரில் விசேட விடுமுறை!
நிறுவனத் தலைவர் விண்ணப்பத்தின் நியாயத்தையும் சரியான தன்மையையும் தனிப்பட்ட முறையில் மதித்து, அங்கீகாரம் அளிக்க வேண்டிய நாட்கள் தொடர்பான விசேட விடுமுறையை திணைக்களத் தலைவரிடம் அனுப்புவார்.
வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் போன்ற இயற்கை அனர்த்தங்களால் சேவைக்கு வர முடியாத அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்கள், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி, ‘டித்வா’ புயல் அல்லது இதற்கான பிற இயற்கை அனர்த்த காரணமாக பொதுப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டமையால் சேவையில் கலந்துகொள்ள முடியாது போன அரச ஊழியர்கள் இந்த விசேட விடுமுறைக்கு தகுதி பெறுவர்.
உத்தியோகத்தர்கள், தமது கடமைக்கு வர முடியாத காரணத்தை குறிப்பிட்டு, பிரதேச செயலாளரால் சான்றளிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் விண்ணப்பத்தை தங்கள் நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். நிறுவனத் தலைவர் விண்ணப்பத்தின் நியாயத்தையும் சரியான தன்மையையும் தனிப்பட்ட முறையில் மதித்து, அங்கீகாரம் அளிக்க வேண்டிய நாட்கள் தொடர்பான விசேட விடுமுறையை திணைக்களத் தலைவரிடம் அனுப்புவார்.
இந்த விசேட விடுமுறை கடந்த நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் சுற்றறிக்கை குறிப்பிட்டுள்ளது.