மாணவர்களை இறக்கிவிட்ட நடத்துனர் பணியில் இருந்து இடைநிறுத்தம்
குறித்த நடத்துனரிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணை முடியும் வரை அவரது பணிக்கு தற்காலிக தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் பாடசாலை மாணவர்களை அரச பேருந்தில் சீசன் டிக்கெட்டுகளுடன் அழைத்துச் செல்ல மறுத்த நடத்துனரை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நடத்துனரிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணை முடியும் வரை அவரது பணிக்கு தற்காலிக தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் அரச பருவப் பயணச்சீட்டைக் கொண்ட பாடசாலை மாணவர்கள் நீண்டகாலமாக அரச பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்படுவதால், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதிகள் குறித்து 1958 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு போக்குவரத்து அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.