வெளியூர்களுக்குச் சென்றவர்கள் கொழும்புக்கு வருவதற்கு போக்குவரத்து வசதி
புத்தாண்டை முன்னிட்டு வெளியூர்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு திரும்புவதற்கு இன்று முதல் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு வெளியூர்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு திரும்புவதற்கு இன்று முதல் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என சபை தெரிவித்துள்ளது.
இதற்காக கூடுதலாக 200 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பயணிகள் போக்குவரத்து முழுமையாக சீரமைக்கப்படும் என்றார்.
கிராமப் புறங்களுக்குச் செல்லும் மக்கள் கொழும்பை நோக்கிச் செல்வதற்காக இம்மாதம் 17ஆம் திகதி முதல் பல விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். (News21)