இலங்கை vs சிம்பாப்வே, இரண்டாவது ஒருநாள் போட்டி முன்னோட்டம்!

இலங்கை - சி ம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெறுகிறது.

ஜனவரி 8, 2024 - 11:21
இலங்கை vs சிம்பாப்வே, இரண்டாவது ஒருநாள்  போட்டி முன்னோட்டம்!

இலங்கை - சி ம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெறுகிறது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தற்போது நடைபெற்றது. அதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் இப்போட்டி முடிவின்றி அமைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர் பிரமதோச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

போட்டி தகவல்கள்

மோதும் அணிகள் - இலங்கை vs சிம்பாப்வே
இடம் - ஆர்.பிரமதோசா கிரிக்கெட் மைதானம், கொழும்பு
நேரம் - மதியம் 2.30 மணி

நேருக்கு நேர்

மோதிய போட்டிகள் - 62
இலங்கை - 47
ஜிம்பாப்வே -  12
முடிவில்லை - 03
பிட்ச் ரிப்போர்ட்

பிரேமாதாச கிரிக்கெட் மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்பகிறது. இதனால் பேட்டர்கள் இந்த மைதானத்தில் சோபிப்பது கடிமான ஒன்றாக இருக்கும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

உத்தேச லெவன்

இலங்கை: அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ்(கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, ஜனித் லியனகே, சஹான் ஆராச்சி, தசுன் ஷனக, துஷ்மந்த சமீர, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, தில்ஷன் மதுஷங்க

சிம்பாப்வே: தகுத்ஸ்வானாஷே கைடானோ, டினாஷே கமுன்ஹுகம்வே, கிரெய்க் எர்வின் (கே), மில்டன் ஷும்பா, சிக்கந்தர் ராசா, ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, ஃபராஸ் அக்ரம், ரிச்சர்ட் நகரவா, பிளஸ்ஸிங் முசரபானி, தபிவா முஃபுட்சா.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!