வெள்ளவத்தை வீதியில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.. போக்குவரத்து குறித்து அறிவிப்பு
வெள்ளவத்தை ஸ்டேஷன் வீதிக்கு அருகில் ஏற்பட்ட குழியினால் காலி வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை ஸ்டேஷன் வீதிக்கு அருகில் ஏற்பட்ட குழியினால் காலி வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன்படி, காலி வீதியில் வாகனங்கள் செல்வதை ஒரு பாதையாக பொலிஸார் மட்டுப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள், மாற்று வழியாக மரைன் டிரைவ் பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.