பிரபல பாடகி தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

அவரது அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பெப்ரவரி 15, 2024 - 17:54
பிரபல பாடகி தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

மலிகா ராஜ்புத் என்ற பெயரால் அறியப்பட்ட பாடகியும் நடிகையுமான விஜய் லட்சுமி, உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். 

நேற்று முன்தினம் மாலை அவரது அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பாடகி மல்லிகா ராஜ்புத் தாய் சுமித்ரா சிங் கூறுகையில், " நாங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால், மல்லிகாவின் மரணம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. 

அத்துடன் அவள் இருந்த அறையின் கதவு உள் பக்கமாக மூடப்பட்டிருந்தது. மேலும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நான் நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியாகப் பார்த்தேன், அப்போது அவள், தூக்கில் தொங்கியபடி இருந்தாள். 

உடனே நான் என் கணவரையும் மற்றவர்களையும் அழைத்தேன்" என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து கோட்வாலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகே மல்லிகா தற்கொலை செய்தாரா எனத் தெரிய வரும் என்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!