பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தால் கடும் நடவடிக்கை
அத்தியாவசிய சேவைகளை சீர்குலைக்க யாருக்கும் இடமளிக்கப்படாது என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளை சீர்குலைக்க யாருக்கும் இடமளிக்கப்படாது என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
கடந்த 24 ஆம் திகதி காலி-மாத்தறை பேருந்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
தாக்குதலை நடத்திய லொறி சாரதி, முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதற்கு ஆதரவளித்தவர்கள் மீது சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து சந்தேக நபர்களும் தற்போது கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.