அந்தரங்க வீடியோ லீக்; பதிலடி கொடுத்த நடிகை ஸ்ருதி நாராயணன்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் சின்னத்திரையில் வித்யா என்கிற கேரக்டரில் நடிப்பவர் தான் ஸ்ருதி நாராயணன்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் சின்னத்திரையில் வித்யா என்கிற கேரக்டரில் நடிப்பவர் தான் ஸ்ருதி நாராயணன்.
சில நாட்களுக்கு முன்பு அவரது வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இந்நிலையில் அந்த விவகாரம் தொடர்பாக ஸ்ருதி நாராயணன் பதிலடி கொடுத்துள்ளார்.
சினிமாவிலோ, சின்னத்திரையிலோ சாதிக்க வேண்டும் என்று பலரும் முயற்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சினிமா மற்றும் சீரியல்களில் பெண்களுக்கு வாய்ப்பு வேண்டுமா அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று ஒரு பிம்பம் இருக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஸ்ருதி நாராயணனின் ஆபாச வீடியோ என்று ஒரு சமூக வலைதளங்களில் பரவின. அதனைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் வாய்ப்புக்காகத்தான் அவர் இப்படி செய்தார் என்று பலரும் பேச ஆரம்பித்த நிலையில் ஸ்ருதி தற்போது அந்த வீடியோ குறித்து பதில் அளித்துள்ளார்.
அதாவது தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு ஏஐ குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தனது வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை ஸ்ருதி தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
மேலும் இன்னொரு ஸ்டோரியில், "ரொம்ப கடினமான காலகட்டத்தில் இருக்கிறேன். நானும் ஒரு பெண்தான். எனக்கு உணர்வுகள் உண்டு. அனைத்தையுமே காட்டு தீ போல் பரப்பாதீர்கள். உங்கள் தாய், சகோதரி, காதலி போன்றோரும் பெண்கள்தான். அவர்களுக்கும் என் போல்தான் உடல் இருக்கிறது. வேண்டுமென்றால் அவர்களின் வீடியோக்களை பார்த்து என்ஜாய் செய்யுங்கள்" என்று தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர் சில சட்டங்கள் குறித்தும் பதிவிட்டுள்ளார்.