மனைவியின் தொலைபேசியில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் முகநூலில் நஜீனா பர்வீன் என்ற பெண்ணுடன் நட்பாகி வந்துள்ளார்.

ஜனவரி 4, 2023 - 17:11
மனைவியின் தொலைபேசியில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தமிழ்நாட்டின் குமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்த முத்துராம் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை வனச்சரக அலுவலகத்தில் வனத்துறை ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் முகநூலில் நஜீனா பர்வீன் என்ற பெண்ணுடன் நட்பாகி வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் நெருக்கமாக பேச ஒருநாள் முத்துராம் நஜீனாவிடம் தனது காதலை தெரிவிக்க உடனே காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.இவர்கள் இருவரும் அதன்பின் 8 மாதங்கள் முகநூலில் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 2020 வருடம் நஜீனா முத்துராமை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதனை முத்துராம் தனது வீட்டிலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் வீட்டில் முகநூலில் பார்த்த பெண்ணிற்க்கு எல்லாம் திருமணம் செய்து தர முடியாது என்று தெரிவித்ததோடு அந்த பெண் முஸ்லீம் மதம் மாற தயாரா என்றும் கேட்டுள்ளனர்.

ஆனால் சேலத்தை சேர்ந்த நஜீனா முத்துராமை.நாம் ஓடி போய் திருமணம் செய்து கொள்ளலாம். நான் பல் மருத்துவராக இருக்கிறேன். ராமநாதபுரத்திலேயே ஒரு கிளினிக் தொடங்கிவாழலாம் என்று கூறியுள்ளார்.

 இதை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து ராமநாதபுரத்திலேயே குடி பெயர்ந்து உள்ளார் முத்துராம்.

ராமநாதபுரத்திற்கு வந்த நஜீனா அங்கேயே முத்துராமை திருமணம் செய்துள்ளார். நஜீனா கொடுத்த அழுத்தத்தால் முத்துராம் மதம் மாறி இஸ்லாம் மதத்தை பின்பற்றி உள்ளார். 

அதோடு தன்னுடைய பெயரை ஜவஹர் என்றும் மாற்றி உள்ளார். எங்கள் மார்க்கத்தில் வரதட்சணை ஆண்தான் கொடுக்க வேண்டும்.

அதனால் எனக்கு ஹூண்டாய் கார், 40 சவரன் நகை, 3 லட்சம் பணம் என்று கேட்டுள்ளார் நஜீனா. முத்துராமும் இதை எல்லாம் கொடுத்து நஜீனாவை திருமணம் செய்துள்ளார்.

2022ல் இவர்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில் இத்தனை நாட்கள் இவர்கள் வாழ்க்கை நன்றாகவே சென்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முத்துராமின் தொலைபேசி தண்ணீரில் விழுந்து ஈரமாக தன்னுடைய மனைவியின் தொலைபேசியை எடுத்து பயன்படுத்தி உள்ளார்.

தன் மனைவியின் தொலைபேசியை பார்த்தவர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

அதில் முழுக்க முழுக்க ஆண்களின் காண்டாக்ட் இருந்துள்ளது. முகநூலில் பிரபலமாக இருக்கும் பல ஆண்களுக்கு பல தேவையற்ற குறுஞ் செய்தி அனுப்பி உள்ளார்.

அத்தோடு பல ஆண்களை திருமணம் செய்ய போவதாவும் தெரிவித்துள்ளார். இதில் அவ்வப்போது சேலம் செல்கிறேன் என்று கூறி, இந்த ஆண்களை சென்று பார்த்து அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.

இவர்களுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்கள் அனைத்தையும் அன்றுதான் முத்துராம் பார்த்துள்ளார். பல ஆண்களுக்கு நஜீனா தனது காதலை தெரிவித்துள்ளார். 

அதில் இருந்த ஐடி கார்டை பார்த்த போதுதான் நஜீனா 28 வயது இல்லை அவர் 33 வயது நிரம்பியவர் என்பதையும் கண்டுபிடித்து உள்ளார்.

அதோடு தன்னிடம் மட்டுமின்றி பல ஆண்களிடம் ஏமாற்றி காசு வாங்கி இருக்கிறார். கூகுள் பேவை பார்த்த போதுதான் அதில் பல ஆண்கள் பணம் அனுப்பி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இப்படி ஆண்களிடம் ஏமாற்றி வாங்கிய பணத்தில் பல் மருத்துவமனை ஒன்றையும் இவர் கட்டி நடத்தி வந்ததை கண்டுபிடித்துள்ளார்.

இதை பற்றி கணவன் கேட்டதற்கு. "உன்னோடெல்லாம் வாழ முடியாது" என்று கூறிவிட்டு நஜீனா சேலத்திற்கு சென்றுள்ளார். இது தொடர்பாக பொலிஸில் கணவன் புகார் அளித்துள்ளார்.  

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!