பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு.. நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்த இந்திய வீரர்!
அந்த அளவுக்கு மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார் அவர். மேலும், எப்போது கேப்டன் விக்கெட் எடுக்கக் கோரினாலும் விக்கெட் எடுத்துத் தரும் பந்துவீச்சாளர் என்ற பெயர் பெற்ற தாக்குர் அதையும் அந்தப் போட்டியில் செய்யவில்லை.

இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வரும் ஷர்துல் தாக்குர் தன் மீது பயிற்சியாளர் டிராவிட் வைத்திருக்கும் நம்பிக்கையை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் உடைத்து விட்டார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். ஷர்துல் தாக்குரை தவிர.
அந்த அளவுக்கு மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார் அவர். மேலும், எப்போது கேப்டன் விக்கெட் எடுக்கக் கோரினாலும் விக்கெட் எடுத்துத் தரும் பந்துவீச்சாளர் என்ற பெயர் பெற்ற தாக்குர் அதையும் அந்தப் போட்டியில் செய்யவில்லை.
மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில், இந்திய அணி முதலில் பந்து வீசியது. ஷமி, பும்ரா முதல் எட்டு ஓவர்களில் அபாரமாக பந்து வீசி ரன் வேகத்தை ஓவருக்கு 4 ரன் என்ற விகிதத்தில் வைத்திருந்தனர்.
அடுத்து ஷர்துல் தாக்குர் வந்த உடன் ரன்களை வாரிக் கொடுக்க ஆரம்பித்தார். இடையே ஷமி 5 விக்கெட்கள் வீழ்த்தினார் பும்ரா, அஸ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆனால், கடைசி வரை விக்கெட்டும் எடுக்காமல் ரன்களை மட்டும் அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருந்தார் தாக்குர்.
10 ஓவர்களின் முடிவில் அவர் 78 ரன்கள் கொடுத்து இருந்தார். மற்ற நான்கு பந்துவீச்சாளர்களும் அதிகபட்சமாகவே 51 ரன்கள் தான் கொடுத்திருந்தனர். அப்படியென்றால் தாக்குர் எந்த அளவுக்கு மோசமாக வீசி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஷர்துல் தாக்குர் உலகக்கோப்பை அணியில் இருந்தாலும் இருக்கிறார் என்பதால் பலரும் அவரது இந்த நிலை குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
அது பற்றி இந்தப் போட்டிக்கு முன் பேசிய இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஷர்துல் தாக்குர் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர் இந்தப் போட்டியில் விக்கெட் வீழ்த்துவார் எனக் கூறி இருந்தார்.
ஆனால், அவரது நம்பிக்கையை முற்றிலுமாக உடைத்து இருக்கிறார் ஷர்துல் தாக்குர். அடுத்த போட்டியிலாவது அவர் ரன்களை கொடுப்பதை நிறுத்த வேண்டும்.