ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார் முஹமது ஷமி!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற, ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய சென்னை அணி, 19.5 ஓவரில் 10 விக்கெட்களை இழந்து, 154 ஓட்டங்கள் எடுத்தது.
சென்னை சார்பில் அதிகபட்சமாக ப்ரேவிஸ், தனது அறிமுக போட்டியிலேயே 25 பந்துகளில், 42 ஓட்டங்கள் எடுத்தார். தொடர்ந்து, 155 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி, 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு, 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி, ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. மேலும், முதல்முறையாக ஐதராபாத் அணி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை வீழ்த்தியுள்ளது.
சென்னை அணி துடுப்பாட்டம் ஆடும் போது, முதல் ஓவரை முஹமது ஷமி வீச அதனை எதிர்கொண்ட ஷேய்க் ரஷீத், முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்சின் முதல் பந்திலேயே, அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை, முகமது ஷமி படைத்துள்ளார்.
முன்னதாக, ஜாக் காலிஸ், கேஎல் ராகுல், பில் சால்ட் ஆகியோரை முதல் பந்திலேயே முகமது ஷமி ஆட்டமிழக்க செய்திருந்தார்.
அடுத்தபடியாக, லசித் மலிங்கா, அசோக் திண்டா, பிரவீன் குமார், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், டிரென்ட் போல்ட் ஆகியோர் முதல் பந்திலேயே 3 முறை விக்கெட் எடுத்துள்ளனர்.