கொழும்பு புறநகர் பகுதியில் ஏழு பெண்கள் கைது

கடவத்தை, எல்தெனிய பிரதேசத்தில் இயங்கிய மசாஜ் நிலையம் ஒன்றும், கடவத்தை பகுதியில் இயங்கிய மற்றுமொரு மசாஜ் நிலையமும் சோதனையிடப்பட்டுள்ளது.

ஜுலை 19, 2024 - 11:19
கொழும்பு புறநகர் பகுதியில் ஏழு பெண்கள் கைது

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விடுதிகளை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதுடன், விடுதியில் தங்கியிருந்த ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவத்தை, எல்தெனிய பிரதேசத்தில் இயங்கிய மசாஜ் நிலையம் ஒன்றும், கடவத்தை பகுதியில் இயங்கிய மற்றுமொரு மசாஜ் நிலையமும் சோதனையிடப்பட்டுள்ளது.

இதன் போது, எல்தெனிய பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தில் நான்கு பெண்களும் கடவத பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்தில் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் ஹகுரன்கெத்த, குருநாகல், ஹக்மன, திஸ்ஸமஹாராமய, எம்பிலிப்பிட்டிய, கொட்டாவ மற்றும் வேயங்கொட ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், அவர்களை மஹர நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!