14 வயது மாணவி தொடர் பாலியல் துஷ்பிரயோகம்: உறவினர்கள் மூவர் கைது; இருவருக்கு வலைவீச்சு
சிறுமியின் பாட்டனார் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொரகஹஹேன பிரதேசத்தில் 14 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் பாட்டனார் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் சிறுமியின் 80 வயதுடைய பாட்டனாரும் உறவுமுறையான இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் சித்தப்பா முறையான ஒருவரும் பாடசாலை மாணவன் ஒருவரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரின் பராமரிப்பின்றி ஹொரண மொரகஹஹேன பிரதேசத்தில் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.