ஹீரோயினாக அறிமுகமாகும் சீரியல் நடிகை!
உப்பு புளி காரம் வெப் தொடரில் நடித்திருந்த சீரியல் நடிகை ஆயிஷா, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான 'உப்பு புளி காரம் ' வெப் தொடரில் நடித்திருந்த சீரியல் நடிகை ஆயிஷா, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார்.
இந்தநிலையில், சீரியல் நடிகை ஆயிஷா தற்போது ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். அதன்படி, அஜித்தின் விடாமுயற்சி, இரும்புத்திரை, ராவண கோட்டம் போன்ற படங்களில் நடித்த கணேஷ் சரவணன், ஆயிஷாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
இந்த படம் மூலம் கணேஷ் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாவதுடன், அறிமுக இயக்குனரான ஜாபர் இப்படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் மறைந்த நடிகர் ரகுவரன் சகோதரர் ரமேஷ், புகழ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.