வைரலாகும் இந்தியன் 2 டிரைலர் எப்படி இருக்கு?
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.
ஜூலை 12 ஆம் திகதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகவுள்ளது. டிரைலர் காட்சிகளில் கமல்ஹாசன் மாறுபட்ட இந்தியன் தாத்தாவாக காட்சியளிக்கிறார்.
மிகவும் அதிரடி ஆக்ஷன் நிறந்த சண்டை காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. கமல்ஹாசன் இப்படத்தில் வித்தியாசமான பல கெட்டப்புகளில் வருகிறார்.
`நீங்க காந்தி வழியில் போராடுங்க நான் நேதாஜி வழியில் போராடுகிறேன்` என்ற வசனங்கள் கூஸ்பம்ஸ் நிகழ்வாக தியேட்டரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் முதல் பாகம் எப்படி மாபெரும் வெற்றி பெற்றதோ இப்பாகமும் அதேப் போல வெற்றியடையும் என ரசிகர்களால் நம்பப்படுகிறது.