நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன் பலி
ஹோட்டலின் நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெந்தோட்டை பகுதியில் பதிவாகியுள்ளது.

ஹோட்டலின் நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெந்தோட்டை பகுதியில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, நேற்று மாலை பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான்.
தமது பெற்றோருடன் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில், நீச்சல் குளத்தில் விழுந்து சிறுவன் நீரில் மூழ்கியமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.