தேவாலயங்கள் அருகே பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு 

கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்டன.

மார்ச் 31, 2024 - 13:25
தேவாலயங்கள் அருகே பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு 

கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்த நிலையில், இவ்வாண்டு ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 1,873 கிறிஸ்தவ தேவாலயங்களில் 6,522 பொலிஸ் அதிகாரிகள், 320 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் 2,746 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!