அக்குரணையில் பாதுகாப்பு அதிகரிப்பு; தயார் நிலையில் இராணுவத்தினர்
கண்டி, அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கண்டி, அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் டெய்லிமிரருக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.