தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளிவந்த செய்தியை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, தேர்தல் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி நேற்று(19) தெரிவித்திருந்தார்.