இரகசியமாக புதைக்கப்பட்ட குழந்தை; விசாரணையில் வெளியான தகவல்

பிறந்து 21 நாட்களான சிசுவொன்று இரகசியமான முறையில் முந்தல் பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஜுன் 25, 2023 - 11:27
இரகசியமாக புதைக்கப்பட்ட குழந்தை; விசாரணையில் வெளியான தகவல்

பிறந்து 21 நாட்களான சிசுவொன்று இரகசியமான முறையில் முந்தல் பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அந்த பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முந்தல் - அகுனாவில பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணும் அவரது கணவரும் இணைந்து உயிரிழந்த குறித்த சிசுவை புதைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் தங்களது சமர்ப்பணங்களை நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்.

பொலிஸார் முன்வைத்த சமர்ப்பணங்களுக்கு அமைய, புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!