காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள பாடசாலைகள்
வடக்கில் உள்ள 29 பாடசாலைகள் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (19) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கில் உள்ள 29 பாடசாலைகள் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (19) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 2 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 9 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல அரச பாடசாலை கட்டடங்கள் நலன்புரி முகாம்களாக தற்காலிகமான மாற்றப்பட்டு வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வடக்கில் தற்போது இயங்கிவரும் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை இராணுவத்தினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
இதேவேளை, மழையுடன் கூடிய காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்வரும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகள் இன்று (19) இயங்காது என, முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு
1 மு/மன்னகண்டல் அ.த.க.பாடசாலை
2 மு/இருட்டுமடு தமிழ் வித்யாலயம்
3 மு/நெத்தலியாறு ஆரம்பப் பாடசாலை
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு
1.மு/கருவேலன்கண்டல் அ.த.க.பாடசாலை
2.மு/கூழாமுறிப்பு அ.த.க.பாடசாலை
3.மு/முத்துவிநாயகபுரம் மகாவித்தியாலயம்
4.மு/பேராறு அ.த.க.பாடசாலை
5.பண்டாரவன்னியன் மகா வித்தியாலயம் (கற்சிலைமடு)
ஆகிய பாடசாலைகள் இன்று இயங்காது என மாவட்டச் செயலாளர், மாவட்ட செயலகம், முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.